திருச்சி புத்தூர் பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி சிறப்பு நிகழ்ச்சிகளை திருச்சி ரோட்டரி கிளப் சக்தி ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பொறியாளர் மொய்தீன் கலந்து கொண்டு மாணவர்களுடைய எதிர்கால லட்சியம் குறித்து கேட்டறிந்தார். இது குறித்து அவர் கூறியது, ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய தனித்திறமைகளை அறிந்து புரிந்து வைத்துள்ளனர்.
கலை துறையிலும் கல்வி துறையிலும் ஒவ்வொரு மாணவர்களும் சாதிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றார். அவர்கள் கல்வியும் வாழ்க்கையிலும் எவ்வாறு வெற்றி பெற வேண்டும். அதற்கான வழிமுறை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments