திருச்சி மாவட்டம் சமயபுரம் கோவில் வளாகம், அன்னதான மண்டபம், குளியலறை அருகே வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் ஆதரவற்ற நிலையில் பலர் பிச்சை எடுத்து வந்தனர்.
இந்நிலையில் சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன், தலைமையில் 70-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்ற தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சிவராஜ் உதவி ஆய்வாளர் ரவி ஆகியோர் சமயபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில் பிச்சை எடுத்த 19 பெண்கள், 19 ஆண்கள் என 38 பேரை மீட்டனர்.
அப்போது அவர்களில் பலர் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் கவனிக்காததால் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களுக்கு மூன்று வேலை உணவு பாதுகாப்பான தங்கமிடம் வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அவர்களை பேருந்தில் ஏற்றி திருச்சியில் உள்ள காப்பத்திற்கு கொண்டு சென்ற போலீசார் காப்பக நிர்வாகிகளிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments