கடந்த (20.11.202-ந் தேதி, திருச்சி சென்னை பைபாஸ் சாலை, சஞ்சீவிநகர் சந்திப்பில், வாகன சோதனையில் போலீசார் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது இளைய தலைமுறையினர் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா போதை பொருள்கள் Virial Pan Masala, Hans Chaap,
Cool LiP ஆகியவற்றை விற்பனை செய்தவதற்காக கிருஷ்ணசிரி மாவட்டம், ஓசூரில் இருந்து இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் 50 மூட்டைகளில் சுமார் ரூ.55,00,000/- மதிப்புள்ள 1070 கிலோ குட்கா போதை பொருட்ள்களை வெங்காய மூட்டைகளுக்கிடையே வைத்து பதுக்கி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டபள்ளியை சேர்ந்த சீனா (எ) சீனிவாசன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தப்பள்ளியை சேர்ந்த சேகர் ஆகியோர்களை கைது செய்து, வழக்குப்பதிவு செய்தும், நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, எதிரிகள் எதிரிகள் சீனா (எ) சீனிவாசன் மற்றும் சேகர் ஆகியோர்கள் தொடர்ந்து குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்பவர்கள். என விசாரணையில் தெரியவருவதால்,
மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்பந்தபட்ட கோட்டை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசிலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.
அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH#
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO






Comments