திருச்சி மாநகரில் பாலக்கரை ரவுண்டானா முதல் மரக்கடை வரையிலான மாநகராட்சி சாலையில் இரு புறங்களிலும் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் அகற்றி வந்தனர். அப்போது ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் பலரும் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், மாநகராட்சி உதவி ஆணையர் அக்பர் அலியை தள்ளிவிட்டதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. மேலும் மாநகராட்சி ஊழியர்கள் வியாபாரிகளுக்கு இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதி சிறு பதற்றத்துடன் காணப்பட்டது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் அதிகரிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் போலீசார் அங்கிருந்த கூட்டத்தினரை அப்புறப்படுத்தினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments