திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டல் எண் 5-ற்குட்பட்ட, 28-வது வார்டு தென்னூர், அண்ணாநகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குப்பைகளைக் கொட்டி குப்பைக் கிடங்காகவும் பல்வேறு கழிவுகளை கொட்டும் இடமாகவும் மாற்றிவரும் அவலநிலை உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மழைப்பெய்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே மக்கள் நலனையும் மற்றும் மைதானத்தில் விளையாடும் குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் நலனைக் கருத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துக் கொடுத்திட வேண்டு என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments