திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சி வனக்கோட்டம், எம்.ஆர் பாளையம் காப்பு காட்டு பகுதியில் அமைந்துள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம், புதிதாக துவங்கப்பட உள்ள திருச்சி வன உயிரியல் பூங்கா (Trichy Zoo) ஆகிய பகுதிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று(15.12.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்கப்படும் யானைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டார்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சி வனக்கோட்டம், வன உயிரினம் மற்றும் பூங்கா வனச்சரக எல்லைக்கு உட்பட்ட எம்.ஆர் பாளையம் காப்பு காட்டு பகுதியில் அமைந்துள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. அவர்கள் இன்று(15.12.2022) ஆய்வு பணிகள் மேற்கொண்டார்கள். மேலும், யானைகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்கப்படும் யானைகள் குறித்து மாவட்ட வன் அலுவலர் திரு.கோ.கிரண் இ.வ.ப மற்றும் உதவி வ பாதுகாவலர் சம்பத்குமார் ஆகியோர்களிடத்தில் விபரங்கள் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து புதிதாக துவங்கப்பட உள்ள திருச்சி வன உயிரியல் பூங்கா (Trichy Z00) பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டு பணிகள் விரைந்து முடிக்க தமிழக அரசு மூலம் வழங்கப்பட வேண்டிய நிதியை கிடைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும். திருச்சி வன உயிரியல் பூங்காவிற்கு (Trichy z00) மத்திய விலங்கு காட்சியக ஆணையத்தின் (CZA) அனுமதி கிடைக்கப்பெறும் நிலையில் மாநில அரசு பங்களிப்புடன் விலங்குகள் உய்விடம்(Encloser). பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சாதனங்கள் அமைப்பதற்கும் தேவையான நிதி ஒதுக்கீடும், உயிரியல் பூங்காவிற்கு தேவையான குடிநீர் வசதியும் செய்து தருவதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில், மாவட்ட வன அலுவலர் கிரண் மற்றும் உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார், வன உயிரினம் மற்றும் பூங்கா வனச்சரக அலுவலர் சுப்பிரமணியம், ஒன்றியக் குழுத் தலைவர்கள் ஸ்ரீதர், துரைராஜ், சனமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா சீனிவாச பெருமாள். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வனத்துறை அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO






Comments