Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் திறப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதியும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 3 தற்காலிக சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 திருச்சியில் இருந்து மதுரை செல்லும் பேருந்துகள மற்றும்  திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் பேருந்து மன்னார்புரம் பேருந்து நிலையம் பகுதியில் இருந்தும், இதே போல் தஞ்சை மார்க்கமாக செல்லும் பேருந்துகளுக்கு சோனா-மீனா திரையரங்க பகுதியிலும் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா கொடியசைத்து துவக்கி வைத்தார். திருச்சியில் பொங்கல் திருவிழாவையொட்டி சிறப்பு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சிறப்பு பேருந்துகள் வரும் 17ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன.

பேருந்து ஓட்டுநர்கள், நடத்தினார்கள் பயணிகளுக்கு இணக்கமாக செயல்பட வேண்டும். தற்பொழுது அதிக அளவு கூட்டம் இருப்பதால் பாதிப்புகள் உண்டாக வாய்ப்பு உள்ளது. எனவே, கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என்றார். மேலும் பொங்கல் திருநாளையொட்டி 1500 காவல் துறையினர் சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எங்கெல்லாம் விபத்து அதிகம் ஏற்படுகிறதோ அந்த பகுதிகளை கண்டறிந்து உரிய பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. செக்போஸ்ட்களில் அதிகளவு காவல்துறை அதிகாரிகளை நியமித்துள்ளோம். இவர்கள் யாரெல்லாம் விதிமீறலில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வார்கள்.

விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் இது பற்றிய தகவலை காவல் கட்டப்பட்ட அறை எண் 100க்கும் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலக whatsapp 9626273399 எண்ணிற்கும் தெரிவிக்கலாம்‌. பொதுமக்களிடம் சாலை விழிப்புணர்வு குறித்து திருச்சி ஜமால் முகமது கல்லூரி மாணவர்களால் மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் சாலை

விழிப்புணர்வு வீதி நாடகம் நடத்தி பொதுமக்களுக்கு சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் மேற்கண்ட விழிப்புணர்வு நாடகத்தை கண்டு ரசித்த திருச்சி மாநகர காவல் ஆணையர் சிறப்பாக வீதி நாடகத்தை நடத்திய ஜமால் முகமது கல்லூரி மாணவர்களை வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *