தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் முனைவர் முனைவர் சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா, மேற்பார்வையில் திருச்சி மாநகரில் ஆதரவற்ற நிலையில் முக்கிய சந்திப்பு சிக்னல்கள் மற்றும் சாலையில் பிச்சை எடுத்து வருவர்களை மீட்டு காப்பங்களில் ஒப்படைக்க திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், போக்குவரத்து உதவி ஆணையர் மற்றும் சரக உதவி ஆணையர்களுக்கு உரிய அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
அதன்படி, திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு, சுமார் 30 காவல் ஆளிநர்களுடன், திருச்சி மாநகரத்தின் முக்கிய பகுதிகளான ஒத்தக்கடை ஆளு சந்திப்பு, ரயில்வே சந்திப்பு, தலைமை தபால் நிலையம் சந்திப்பு, மன்னார்புரம் ரவுண்டான, மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், காந்திமார்க்கெட், முவு ஜங்ஷன் ஆகிய இடங்கள் மற்றும் திருச்சி மாநகர முழுவதும் பரவலாக மீட்பு குழுக்கள் சென்று, ஆதரவற்ற நிலையில்
முக்கிய சிக்னல்கள் மற்றும் சாலையில் பிச்சை எடுத்து வருவர்களை கண்டறிந்தும், கண்டோன்மெண்ட் காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 31 நபர்களையும், பொன்மலை காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 8 நபர்களையும், ஸ்ரீரங்கம் காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 8 நபர்களையும், தில்லைநகர் காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1 நபரும், காந்திமார்கெட் காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 7 நபர்கள் உட்பட 47 ஆண்கள், 8 பெண்கள் ஆக மொத்தம் 55 நபர்கள் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான குழுக்களால் மீட்கப்பட்டார்கள்.
இவர்கள் அனைவரும் திருச்சி மாநகரில் உள்ள மறுவாழ்வு காப்பங்களில் ஒப்படைக்கப்பட்டார்கள். திருச்சி மாநகரில் இதுபோன்று ஆதரவற்ற நிலையில் முக்கிய சந்திப்பு சிக்னல்கள் மற்றும் சாலையில் பிச்சை எடுத்துவருவர்களை அவர்களின் மறுவாழ்விற்காக தொடர்ந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, காப்பங்களில் ஒப்படைக்கப்படுவர்கள் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துக்கொண்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments