திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் இனாம் சமயபுரம் பகுதியில் அமைந்துள்ளது. அருள்மிகு ஆதி மாரியம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா இன்று நடைபெற்றது.
சமயபுரம் திருக்கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், கோயில் பணியாளர்கள், பக்தர்கள் பூ தட்டுகளுடன் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அருள்மிகு ஆதிமாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
மேலும் மஹா தீபாரதனையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து அம்மனை ஒம் சக்தி பரா சக்தி பக்தி முழங்க தரிசனம் செய்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments