Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாழைத்தார் ஏலம்

திருச்சி அருகே உள்ள திருச்செந்துறை வாழை வணிக விற்பனை நிலையத்தில் வாரம் தோறும் வியாழக்கிழமை வாழைத் தார்கள் ஏலம் விடப்படுவதால் விவசாயிகள் தங்களது வாழைத்தார்களை கமிஷன் தரகு இல்லாமல் விற்று லாபம் பெறலாம் என வாழை விவசாயிகளுக்கு திருச்சி விற்பனைக் குழு செயலாளர் சுரேஷ் பாபு வெளியிட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி விற்பனைக்குழு கீழ் செயல்பட்டு வரும் திருச் செந்துறை வாழை வணிக வளாகத்தில் பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் விவசாயிகளின் வாழைத்தார்கள் ஏலமுறையில் விற்று தரப்படுகிறது. இந்த ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்து வருகின்றனர்.

எனவே வாழை சாகுபடி செய்து உள்ள விவசாயிக்கள் வியாழக்கிழமை தோறும் நடைபெறும் ஏலத்தில் தங்களின் வாழைத்தார்களை கொண்டு வந்து எந்த வித கமிஷன், பிடித்தம் இல்லாமல் நல்ல விலைக்கு விற்று பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செல்: 90950 99472, மேற்பார்வையாளர் செல் : 7010487396, 95851 67077 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *