திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கே. உடையாபட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி ஆட்டை மேய்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த நிலையில் இதே ஊரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜான் பிரிட்டோ என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது ஆட்டின் மீது இருசக்கரம் வாகனம் மோதியது.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஜான் பிரிட்டோ தான் வைத்திருந்த இந்திய அளவில் உரிமம் பெற்ற கை துப்பாக்கியை வைத்து ராஜ்குமார் அவரது மனைவி ஜெயசீலா ராஜ்குமாரின் அண்ணன் மனைவி பிரியங்கா ஆகியோரை துப்பாக்கி காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ராஜ்குமார் மணப்பாறை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஜான் பிரிட்டேவை கைது செய்த போலீசார், எதிரிகளை திட்டியது, கொலை மிரட்டல், ஆயுதங்களை வைத்து மிரட்டல் செய்ததாகவும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் வேலை பார்த்ததாகவும் 31.10.2020 ஆம் ஆண்டு ராணுவத்தை விட்டு ஓய்வு பெற்று, பின்னர் மொண்டிப்பட்டி காகித ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரிடமிருந்து அரசு உரிமம் உள்ள துப்பாக்கியும், இரண்டு தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments