திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
மணப்பாறை மதுரை சாலையில் உள்ள 75 ஆண்டுகள் பழமையான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டப்பேரவை உறுப்பினர் ப.அப்தும்சமதுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். நம் பள்ளி நம்பெருமை 234/77 ஆய்வில் பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகம், கணினி அறை, மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு மற்றும் பள்ளியின் கட்டிடங்களின் தன்மை குறித்தும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆசிரியர்களின் கோரிக்கையினை கேட்டறிந்து, மாணவர்களிடம் அவர்கள் கற்கும் பாடங்களிள் வினாக்கள் எழுப்பி உரையாடினார். 234/77 ஆய்வுப் பயணத்திட்டத்தின் கீழ் 34-வது ஆய்வை மேற்கொண்டு, பள்ளியின் மேம்பாட்டிற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட உயர் கல்வி அலுவலர் பாலமுரளி, மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision






Comments