கோடைகாலத்தில் வழக்கமான அளவை விட இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனத்தின் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து தொடங்கியது. இரவு நேரத்திலும் அதன் புழுக்கம் எதிரொலித்தது. ஆனால் நேற்று மதியத்திற்கு பிறகு வெயிலில் தாக்கம் சற்று குறைந்து மாலை நேரத்தில் குளிர்ந்த காற்றும் வீசியது. பின்னர் இரவு 7 மணிக்கு பிறகு மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. திருச்சி மாவட்டத்தில் நேற்று சுமார் 5 மணி நேரம் கொட்டி தீர்த்த மலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் இதில் திருச்சியை அடுத்த வாத்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீரென சூறாவளி காற்றுடன் மழை தொடங்கியது. அப்போது கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த வைக்கோல் மற்றும் வீட்டின் கூரை உள்ளிட்டவை சூறாவளி காற்றில் பறந்தன.
இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அப்போது திடீரென ஆலங்கட்டி மழை தொடங்கியது. தரையில் விழுந்த ஆலங்கட்டிகளை கையில் எடுத்து பார்த்து பொதுமக்கள் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு பெய்த ஆலங்கட்டி மழையால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments