Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

மண்டல இணை இயக்குநர் திருச்சி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு

மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), திருச்சி அலுவலகத்தில் இரவு காவலர் பொதுப்பிரிவு முன்னுரிமையற்ற (Open Competition-Non-Priority) பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இப்பணிக்காலியிடத்திற்கான கல்வித்தகுதி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும் மற்றும் கீழ்க்கண்ட வயது வரம்புக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

குறைந்தபட்ச வயது (01.01.2023) அன்றைய நிலையில் 18, அதிகபட்ச வயது 32 ஆகும். தாழ்த்தப்பட்ட இனத்தவர் (SC) தாழ்த்தப்பட்ட அருந்ததி இனத்தவர் (SCA) மற்றும் மலைசாதி இனத்தவர்கள் 37 வயதுக்குள்ளும், பிற்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்பட்ட வகுப்பினர் (MBC) மற்றும் பிற்பட்ட முஸ்லீம் இனத்தவர் (BCM) 34 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் (OC) 32 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

எனவே, மேற்கண்ட தகுதியும் விருப்பமும் உள்ள மனுதாரர்கள் விண்ணப்பத்தினை இவ்வலுவலகத்தில் பெற்று தங்களது அனைத்துக் கல்விச் சான்றுகள் ஜாதிச்சான்று, ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றின் ஒளிநகல்களுடன் மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு),

மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அலுவலகம், நெ.16-சி, வில்லியம்ஸ் ரோடு, மாவட்ட நல நிதிக்குழு வளாகம், திருச்சி – 620001 என்ற முகவரிக்கு (10.04.2023) மாலை 5:00 மணிக்குள் பதிவஞ்சல் மூவமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *