திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது. மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில், ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா முன்னிலையில் இக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக இக்கூட்டத்திற்கு வந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை ஆகிய கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முன்னதாக ராகுல் காந்தி பதவி பறிப்பை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி பதாகைகளை கையில் ஏந்தி மாமன்ற கூட்டத்திற்கு கவுன்சிலர்கள் வந்தனர். இதைத் தொடர்ந்து மாநகராட்சி கூட்டம் தொடங்கியது.
காவல் நிலைய தாக்குதலில் கைதாகி ஜாமின் பெற்ற அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களும், மாமன்ற உறுப்பினர்களுமான விஜய், முத்து செல்வம், ராமதாஸ் ஆகிய மூவரும் இன்று அவசரக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவர்கள் திருச்சி நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் பெற்றதையடுத்து மறு உத்தரவு வரும் வரை 5 பேரும் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments