திருச்சி கொட்டப்பட்டு ஆவின் பால் பண்ணை முன்னதாக திருச்சி மாநகரில் உள்ள முகவர்கள் கையில் மிக்சர் மற்றும் முறுக்கு பாக்கெட் வைத்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்களை பால் விற்பனை செய்வதை விட மிக்சர்,
முறுக்கை அதிகமாக விற்பனை செய்ய வலியுறுத்துவதாகவும் காலாவதி ஆகும் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக மிச்சர் முறுக்கு பொருட்களை கொடுப்பதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
இதனை கண்டித்து ஆவின் பால்பண்ணைக்கு முன்னதாக தங்களது கண்டனத்தை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாநகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட முகவர்கள் உள்ளனர். பால்வினியோகம் தொடர்ந்து தாமதப்படுவதாகவும் அதனை சரி செய்யாமல் தங்களை தின்பண்டங்களை விற்க சொல்வது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
தரமற்ற மிக்சர் பாக்கெட்டுகளை கொட்டியும் அதன் காலாவதியான தேதியை குறித்தும் பேசி கோஷம் எழுப்பினர். இந்த பொருட்களும் அதிக விலையில் உள்ளதாகவும் தரமற்றதாக இருப்பதாகவும் ஆவின் முகவர்கள் குற்றம்சாட்டினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments