திருச்சி பொன்மலை மிலிட்டரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (38). இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தார். இதற்கிடையே குடிப்பழக்கத்திற்கும் ஆளானார்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மது அருந்திவிட்டு அருகில் உள்ள சாக்கடை அருகே ஒரு திட்டில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக லோகநாதன் கழிவு நீர்சாக்கடைக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இன்று காலையில் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் லோகநாதன் பிணமாக கிடப்பதை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொன்மலை போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திரு ச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் சாக்கடைக்குள் விழுந்ததில் மூச்சுத் திணறு இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார் ?என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments