Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டணை

கடந்த (03.02.2023)ந் தேதி இரவு மாலதி (30) என்பவர் தனது கணவர் மோகனகுமார் என்பவருடனும் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடனும் எர்ணாகுளம் – காரைக்கால் வரை செல்லும் வண்டி எண் – 16188 விரைவு இரயிலில் இஞ்சினுக்கு அடுத்துள்ள 2-வது UN Reserved Coach–ல் ஏறி நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்காவிலுள்ள இருக்கூர் செல்வதற்காக எர்ணாகுளம் – கரூர் வரை பயணம் செய்து வந்தனர்.

அந்த சமயம் அதே பெட்டியில் பயணம் செய்து வந்த கேராளா மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம் ஆயிரூர் வடக்கு (Po), கோயிக்கல்லைச் சேர்ந்த சங்கரநாராயணபிள்ளை என்பவரின் மகன் கணேஷ்குமார் (62) என்பவர் (04.02.2023)ம் தேதி அதிகாலை இரயிலானது புகழுர் – கரூர் இரயில் நிலையத்திற்கு இடையே சென்று கொண்டிருந்த சமயம் கணேஷ்குமார் மாலதியின் இரு சிறுமிகளில் ஒருவரான 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனை கவனித்த மாலதி கரூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கரூர் இருப்புப்பாதை காவல் நிலைய குற்ற எண்-08/2023 U/s. 9(m) & 10 of POCSO Act 2012-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டும். சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கணேஷ்குமார் இந்த வழக்கானது நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது.

இந்நிலையில் விசாரணை முடிவுற்று இன்று (09.05.2023)ம் தேதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கணேஷ்குமார் (62) என்பவரை குற்றவாளியென முடிவு செய்தும் எதிரிக்கு 5ஆண்டு காலம் மெய்காவல் தண்டனை மற்றும் ரூ.1000/- அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் காலம் சிறைத்தண்டணை அனுபவிக்க வேண்டும் என்றும் கரூர் கனம் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி நஜீமாபானு தீர்ப்பு வழங்கினார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50,000/- இழப்பீடாக வழங்கவும் தீர்ப்பு வழங்கியுள்ளார். மேற்படி வழக்கினை (95 நாட்களில்) திறமையாக புலன் விசாரணை செய்து எதிரியை உடனடியாக கைது செய்த திருச்சி இருப்புப்பாதை காவல் நிலைய காவல் ஆய்வாளர் மோகன சுந்தரியையும் அவருக்கு உதவியாக இருந்த கரூர் இருப்புப்பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கேசவன், நீதிமன்றக்காவலர் பூபதி ஆகியோரை

தமிழ்நாடு இரயில்வே காவல் துறை துணை இயக்குனர் வனிதா, சென்னை மாவட்ட இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) திருச்சி மாவட்ட இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் பாராட்டுகளை தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *