இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் கரூர் மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் வரும் (18.5.2023) வியாழன் கிழமை காலை 10:30 மணி அளவில் தோகைமலை வட்டாரம் புழுதேரியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் மாம்பழத்தில் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் மாம்பழத்தில் உள்ள சத்துக்கள் அதன் நன்மைகள், மாம்பழ ஸ்குவாஷ், மாம்பழ பார்/மிட்டாய் மற்றும் உலர் மாங்காய் பவுடர் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த செயல்முறை விளக்கம் கூடிய பயிற்சியும் நடைபெற உள்ளது. மேலும் தொழில் முனைவோருக்கான அரசு திட்டம, உணவு தரச்சான்று எவ்வாறு பெறுவது, சந்தை வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
எனவே விவசாயிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார். மேலும் முன் பதிவு செய்ய 9750577700 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். முன் பதிவு மிக அவசியம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments