கரூர் மாவட்டம் குளித்தலை, நங்கவரம் அடுத்து சவாரி மேடு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் கலைவாணி இவரது மகள் தேவிகா (17). அதே பகுதியை சேர்ந்த திமுக வார்டு கவுன்சிலர் குணசேகரனின் மகன் கஜேந்திரனை (18) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி இரவு கஜேந்திரன் வீட்டுக்கு தேவிகா செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். நேற்று முழுவதும் காணாமல் பெற்றோர்கள் தேடி உள்ளனர். பின்னர் குளித்தலை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று வீட்டின் அருகே உள்ள கிணற்றில் பிணமாக மிதந்து உள்ளார். உடல் மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறப்பில் சந்தேகம் இருப்பதாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments