Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் பேச்சு

திருச்சி திருவெறும்பூரில் எம்ஜிஆர் சிலையை இன்று (06.07.2023) மாலை திறந்து வைப்பதற்காக சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

அதன்பிறகு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகள் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை சேர்ந்த வீரர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்….. அதிமுக ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு முடக்கி உள்ளது. முக்கியமாக விவசாயிகளுக்கு மிக பயனுள்ள திட்டமான காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர்.

14,000 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் முதற்கட்ட பணிகளை நானும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் துவக்கி வைத்தோம். தற்பொழுது அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் சேலம் தலைவாசல் பகுதியில் கால்நடை பூங்கா அதேபோல் ஏரி குளங்களை தூர்வாரி ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் சேமிக்க திட்டங்களை தீட்டினோம்.

அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் திமுக அரசு கிடைப்பில் போட்டு உள்ளது. மீண்டும் காவிரி குண்டாறு திட்ட பணிகளை அதிமுக ஆட்சி வந்த உடன் தொடரும். அத்திட்டத்தை பணிகளை முடித்து துவக்கியும் வைப்போம்.  அதிமுக ஆட்சி மீண்டும் மலரும் என குறிப்பிட்டார். நானும் ஒரு விவசாயி காளைகளை வளர்ப்பதும் கடினம். காளைகளை அடக்குவதும் கடினம். 

பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து காளைகளை வளர்த்து ஒரு சில பரிசுகளுக்காக அதனை நாம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க வைப்பததாற்காக வளர்ப்பது கிடையாது. பாரம்பரியமான விளையாட்டு என்பதால் தமிழர்களின் வீரத்தை கலாச்சாரத்தை பறைசாற்றும் விளையாட்டு என கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *