திருச்சி கம்பரசம்பேட்டையை சேர்ந்த பொன்னு மகன் முத்துராமலிங்கம் (46). இவரது மனைவி பாரதி. இவர்கள் இருவரும் சேர்ந்து திருச்சி தில்லை நகர் பகுதியில் சிட்பண்ட் நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்களிடம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் திருச்சி கே.கே.நகரை சேர்ந்த ஜவுளி வியாபாரியான சாகுல் அமீது என் பவர் மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். முத்து அதில் தன்னிடமும், தனது குடும்பத்தாரிடமும் இருந்து 7.4 கோடியே 7 லட்சத்து 30 ஆயிரத்தை முத்துராமலிங்கம், பாரதி பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாரதியை கைது செய்தனர். தலைமறைவான முத்துராமலிங்கத்தை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று பெரிய கடை வீதி பகுதியில் முத்துராமலிங்கத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரொக்கம் மற்றும் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் முத்து ராமலிங்கத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முத்துராமலிங்கம்-பாரதி தம்பதியினர் இதேபோன்ற பல கோடி ரூபாய் மோசடி செய்த குற்றத்துக்காக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதும் பின்னர் அவர் கள் ஜாமீனில் வெளியே வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn






Comments