Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம் (Aerodorme Committee Members Meeting) இன்று 15.07.2023-ந்தேதியன்று காலை 11:00 மணிக்கு விமான நிலைய குழுவின் தலைவர் / திருச்சி மாநகர காவல் ஆணையர்  M.சத்திய பிரியா, தலைமையில் விமான நிலைய இயக்குனர் P.சுப்பிரமணி அவர்களால் திருச்சி பன்னாட்டு விமான நிலைய கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது.

இந்த குழுவில் விமானநிலைய பாதுகாப்பு குழு, பாதுகாப்பு பிரிவு, இந்திய விமானப்படை, தேசிய பாதுகாப்பு படை, குடியேற்ற பணியகம், சுங்கத்துறையினர், உளவுத்துறை பணியகம், சிறப்பு பணியகம், திருச்சி, மக்கள் தொடர்புத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகள், விமானநிலைய அதிகாரிகளை உறுப்பினர்கள் மற்றும் அரசு மற்றும்

தனியார் விமான நிறுவனங்களின் பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர்களை கொண்டு இக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை மற்றும் விமான கடத்தல் தடுப்பு சம்மந்தமான ஒத்திகை பயிற்சி நடத்தியும், தீவிரவாதிகளிடமிருந்து விமானத்தில் உள்ள பயணிகளை எவ்வாறு பத்திரமாக காப்பாற்றபட வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டன.

மேலும் இக்கூட்டம் மற்றும் பயிற்சி நடத்தப்பட்டதன் மூலம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்ததாக திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துக்கொண்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *