செட்டிநாடு பகுதிகளின் உணவு, உடை, கலாச்சாரம் ஆகியவற்றை எடுத்து கூறும் வகையில் திருச்சியில் செட்டிநாடு சந்தை கண்காட்சி இன்று (05.08.2023) தொடங்கியது. திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கண்காட்சியை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் செட்டிநாடு பகுதிகளை சேர்ந்த சேலைகள், ஆடைகள், உணவு வகைகள், கைவினைப் பொருட்கள், ஆபரண நகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
85 அரங்குகள் அமைக்கப்பட்டு அவை அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இன்னும் கட்டட பொருட்கள் விற்பனையாளர்கள், வங்கிகள் மற்றும் சிட்பண்டுகள் உடைய அரங்குகளும் இடம் பெற்றுள்ளன. இலவச பொது மருத்துவ பரிசோதனை ,இலவச காது பரிசோதனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
கண்காட்சியில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை குலுக்கல் முறையில் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக செட்டிநாட்டு உணவுகள் வெள்ளை பனியாரம், அந்தர்ப்பம், ஆடிக்கூழ் பச்சை தேன்குழல், கவுனி அரிசி போன்றவைற்றை பார்வையாளர்கள் ருசி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சி இன்றும், நாளையும் நடைபெறுகிறது. ஏராளமான மக்கள் கண்காட்சியில் உள்ள பொருட்களை கண்டு களித்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5



            
            
            
            
            
            
            
            
            
            


Comments