திருச்சி மாவட்டம், இனாம் சமயபுரம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஆதி சமயபுரம் மாரியம்மனை வணங்குவோருக்கு பகைவரை ஒடுக்கி சத்துருக்களை நிவர்த்தி செய்து காக்கும் கடவுளாக விளங்கும் கோயிலில் உலக நன்மைக்காவும், விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்தவும், மழை வேண்டியும் ஸ்ரீதேவி சப்த சதி பாராயணம், ஸ்ரீ சண்டி ஹோம விழா நடைபெற்றது.
இந்த ஹோம விழா 5ம் தேதி காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி கணபதி ஹோமம், ஸ்ரீ துர்கா லட்சுமி சரஸ்வதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மாலை 6 மணிக்கு 64 யோகினிகள், 64 பைரவர்கள் பலி தீபாராதனை நடைபெற்றது.
6ம் தேதி இன்று காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, கலச பூஜை, சண்டி ஹோமத்துடன் துவங்கி காலை 10:45 மணிக்கு கன்னிகா, சுகாசினி, வடுகபூஜை, பட்டுப்புடவை ஹோம்மும், 11:30 மணிக்கு கடங்கள் புறப்பாடும் ஸ்ரீ ஆதி மாரியம்மன் கடங்கள் அபிஷேகமும் நடைபெற்றது. விழாவில் கோயில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோயில் பணியாளர்கள் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments