திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு படையினருக்கு, மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தனது விருப்ப நிதியில் இருந்து, 6 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பைபர் படகு உள்ளிட்ட மீட்பு சாதனங்களை வழங்கினார்.

திருச்சி மாவட்டத்தில் 10 இடங்களில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
திருச்சியில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் மூழ்கியவர்களை மீட்கவும் அடித்துச் செல்லப்பட்டவர்களை காப்பாற்றும் பணியிலும், மழை மற்றும் வெள்ள காலங்களில் பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார்தனது விருப்ப நிதியில் இருந்து ஆறு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பத்து பைபர் படகு, படகு எஞ்சின், நீர் மூழ்கி கேமரா, விலங்குகளை மீட்கும் கருவி, பாம்பு பிடிக்கும் கருவி போன்றவற்றை வழங்கினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments