திருச்சியை அடுத்த கல்லணை பகுதியில் தோகூர் போலீசார் கடந்த 5ம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது தஞ்சை பகுதியில் இருந்து ஆர் என்5 இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்களை மறித்த பொழுது அவர்கள் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு ஓடி உள்ளனர் அவர்களை விரட்டியுள்ளனர் இதனால் அவர்கள் போலீசார் எனும் திரு தப்பிப்பதற்காக கொள்ளிட ஆற்றில் தப்பி ஓடி சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை தோகூர் போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து நிறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் அன்று இரவு பத்து மணிக்கு மேல் அந்த வாலிபர்கள் தோகூர் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை எடுக்க முற்பட்ட பொழுது போலீசார் அவர்களை விரட்டியுள்ளனர். இதனால் போலீசாரிடம் இருந்து மீண்டும் தப்பிப்பதற்காக அங்கிருந்து ஓடி வந்தவர்கள் கல்லணை கரிகால சோழன் யானை சிலை அருகே கல்லணை காவிரி ஆற்றில் குதித்துள்ளனர். பின்னர் வாலிபர்களை விரட்டி வந்த தோகூர் போலீசா வாலிபர்கள் இருவரையும் காணாது திரும்ப காவல் நிலையம் சென்றுள்ளனர். இந்த நிலையில் கல்லணை காவிரி ஆற்றில் குதித்த வாலிபர்கள் சுமார் 20 நிமிடத்திற்கு கல்லணை தண்ணீரில் நீச்சல் அடித்து கொண்டிருந்து உள்ளனர். ஒரு கட்டத்தில் நீச்சல் அடிக்க முடியாத சூழ்நிலையில் தங்களை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டனர்.
அப்பொழுது இரவு நேரத்தில் அந்த பகுதியில் இருந்த அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் காவிரி அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் இருந்து மனிதர்களின் சத்தம் கேட்பதை பார்த்து என்னவென்று லைட் அடித்து பார்த்துள்ளனர். அப்பொழுது இரண்டு பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே அப்பகுதி வாலிபர்கள் கல்லணையில் குதித்து அவர்களை மீட்டு தோகூர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில் அவர்களிடம் தோகூர் போலீசார் விசாரித்த போது திருச்சி பாலக்கரை முதலியார்சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல் இவரது மகன் ஆரோக்கிய செல்வகுமார் (20). இவர் தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வருகிறான். இவனது நண்பன் திருச்சி காஜா பேட்டை பசுமடம் பகுதியை சேர்ந்த அப்துல்லாச மகன் முகமது செலார்ஷா (19) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் கும்பகோணம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தை திருடி வந்தது தெரிய வந்தது.
மேலும்போலீசார் மறிக்கவும் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பி சென்றதாகவும் பின்னர் அந்த இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது போலீசார் மீண்டும் விரட்டியதால் தப்பிக்க வழி தெரியாமல் காவிரி ஆற்றில் குதித்ததாகவும் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் தோகூர் போலீசார் ஆரோக்கிய செல்வகுமார் மற்றும் முகமது செலார்கஷா ஆகிய இருவரிடம் விசாரித்து வந்த நிலையில், கடந்த 5ம் தேதி மாலை உத்தமர்சீலி கொள்ளிடம் ஆற்று மணல் குவாரியில் இருந்து வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு சென்ற கேசியர் மணிகண்டனிடமிருந்து உத்தமர்சீலி மேல வெட்டி பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் மணிகண்டன் மற்றும் அவர்களுடன் வந்த அரவிந்த் ஆகிய இருவர் மீது சக்கர வாகனத்தில் மோதி கீழே தள்ளி மிளகாய் பொடியை தூவி அவர்கள் வைத்திருந்த ரூ 8 லட்சம் பணத்தை எடுத்துச் சென்று உள்ளனர்.
அது சம்பந்தமாக திருச்சியை நம்பர் ஒன் டோல்கேட் போலீசார் அந்த மர்ம நபர்களை தேடி வந்து நிலையும் இவர்கள் இருவரும் போலீசார் கைது செய்து விசாரிப்பது தெரிய வந்த நிலையில் அந்த வழக்கில் அவர்களுக்கு தொடர்பு இருக்குமா என்ற அடிப்படையில் அவர்கள் இருவரையும் நம்பர் ஒன் டோல்கேட் போலீசார் அவர்கள் இருவரையும் தோகூர் போலீசாரிடம் இருந்து விசாரனைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் கல்லணை பகுதியில் பெரும் பரபரப்பு ஏ ற்படுத்தி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5



Comments