Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

காவலர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் பாராட்டு

திருச்சி பாலக்கரை காவல்நிலைய எல்லைகுட்பட்ட முதலியார் சத்திரம் முனிஸ்வரன் கோவிலை சேர்ந்த தனியார் வங்கியில் உதவி மேலாளாராக பணிபுரிந்து வரும் ஜான்பால்ராஜ் (36) த.பெ.சாலமன் என்பவர் மேற்படி தெருவில் இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்து குடியிருந்து வருவதாகவும், தனது அக்காவின் திருமணத்திற்காக ஒரு வீட்டின் பீரோவில் நகைகளை வைத்துவிட்டு, நேற்று (11.08.23)-ந்தேதி இரவு மற்றொரு வீட்டில் உறங்க சென்றதாகவும்,

மீண்டும் இன்று (12.08.23)-த்தேதி காலை 07.00 மணிக்கு பார்த்தபோது நகைகள் இருந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாகவும், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த சுமார் ரூ.1,30,000/- மதிப்புள்ள சுமார் 6.1/4 பவுன் (51 கிராம்) தங்க நகைகளையும், ரொக்கம் ரூ.56,500/- ஆகியவை திருடு போய்விட்டதாகவும், மேற்படி திருடு போன நகைகள் மற்றும் ரொக்க பணத்தை கண்டுபிடித்து தருமாறு கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பாலக்கரை காவல் நிலைய குற்ற எண். 1312/2023 ச/பி 457, 380 இதச-ன்படி வழக்கு பதிவு செய்தும், திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் பாலக்கரை காவல்ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது.

தனிப்படையினரின் புலன்விசாரணையில் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு விசாரணை செய்ததில், திருச்சி மாநகரம், பாலக்கரை காவல்நிலையத்தில் வழிப்பறி மற்றும் பூட்டியவீட்டில் திருடியதாக மூன்று வழக்குகளும், எ.புதூர் காவல்நிலையத்தில் திருடியதாக ஒரு வழக்கிலும் சம்மந்தப்பட்ட பாலக்கரை கூனிபஜாரை சேர்ந்த எதிரி சதிஸ் @ முத்துபாண்டி என்று தெரியவந்ததன் பேரில், மேற்படி எதிரியை தனிப்படையினர் பல இடங்களில் தேடியும் ரகசிய விசாரணை மேற்கொண்டு மேற்படி எதிரியை (12.08.23)-ஆம் தேதி சுமார் 11.30 மணிக்கு கைது செய்தும், அவரது வீட்டில் இருந்த நகைகளை எதிரி எடுத்து ஆஜர் செய்த நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேற்கண்ட வழக்கில் சிறப்பாக பணியாற்றி துரிதமாக புலன்விசாரணை செய்து எதிரியை கைது செய்த பாலக்கரை காவல்நிலைய காவல் ஆய்வாளர் .நிக்சன் மற்றும் தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் N.காமினி, இன்று நடைபெற்ற மாதந்திர குற்ற ஆய்வு கூட்டத்தின்போது நேரில் அழைத்து சான்றுகள் வழங்கி, வெகுவாக பாராட்டி, வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார். மேலும் இவ்வழக்கில் புகார்தாரர் அவரது வீட்டில் நடந்த களவை மிகதுரிதமாக விசாரணை செய்து 6 மணி நேரத்திற்குள் எதிரிகளை கைது செய்த திருச்சி மாநகர காவல் துறையினருக்கு மனதாரதனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *