திருச்சி திருவானைக்காவல் அருகே உத்தமர்சீலி அருகே மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர் மணிகண்டன் மணல் குவாரி வசூல் பணத்தை கொண்டு சென்றார். அப்போது மணிகண்டன் முகத்தில் மிளகாய் பொடியை தூவி ரூ.8 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் வழிப்பறி செய்தனர்.

இதுக்குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (23), பாலாஜி (20), ரஞ்சித் பிரேம்குமார் (22), தாண்டீஸ்மூர்த்தி (24), ஷேக் அப்துல்காதர் (20), மற்றொரு தினேஷ்குமார் (24) உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பலை சமயபுரம் போலீசார் கைது செய்து அவர்களிடம் ரூ.3 லட்சம் பணத்தினை பறிமுதல் செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn






Comments