Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு அரசு விருது

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 47,218 மாற்றுத்திறனாளிடமிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் தற்போது வரை 4,3057 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலேயே திருச்சிராப்பள்ளி மாவட்டம் இத்திட்டத்தில் முதன்மை மாவட்டமாக உள்ளது.

10 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டமான நலவாரியம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 33,321 மாற்றுத்திறனாளிகளுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் அமைத்து தருவதற்கு ஏதுவாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் நாளன்று பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் ஒன்றியவாரியாக மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க பரிசீலனை செய்யப்பட்டு 443 மாற்றுத்திறனாளிகளுக்கு ” வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

565 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டிற்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 525 விண்ணப்பங்கள் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்டு நேர்முக தேர்வு வாயிலாக அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு 125 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பொதுப் பிரிவின் கீழ் இன்று விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்பட்டுள்ளது. பார்வைத்திறன் குறைபாடுடைய மற்றும் காது (ம) வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட திறன் பேசி வழங்கும் திட்டத்தில் 500 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அதில் 250 பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட திறன் பேசி வழங்கப்பட்டது. இன்று மீதமுள்ள 250 காது (ம) வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கும மொத்தமாக வழங்கப்பட்டுள்ளது. 500 மாற்றுத்திறனாளிகளுக்கு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டில் 9618 அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.22,16,18,000/-ம் 582 கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,35,86,000/-ம் 453 தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.98,58,000/-ம் 69 முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12,28,000/-ம மற்றும் 207 தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45,54,000/-ம் ஆக மொத்தம் 10929 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் ரூ.25,08,14,000/- வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டில் அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக்கொள்ள கூடுதலாக மாதம் ரூ.1000/- வழங்கும் திட்டத்தில் 112 பயனாளிகளுக்கு பயன்பெற்று ரூ.11,46,954/- வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டில் இலவச பேருந்து பயண சலுகை அட்டை 917 பார்வையற்றோருக்கும். 247 காது மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கும், 341 அறிவுசார் குறைபாடுடையோருக்கும் மற்றும் 846 கை. கால் பாதிக்கப்பட்டோருக்கும் ஆக மொத்தம் வழங்கப்பட்டுள்ளது.

2351 மாற்றுத்திறனாளி படித்த வேலைவாய்ப்பற்றோருக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 2022-2023ஆம் நிதியாண்டிற்கு ரூ.25,39,200/- நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுஇதுவரை 200 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12,51,200/- வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரம் மேம்பட சிறு மற்றும் குறுந்தொழில் வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.20,00,000/- நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு இதுவரை 88 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19,97,989/- வழங்கப்பட்டது. ஆவின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,50,000/- நிதி ஒதுக்கீடு பெற்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50,000/- வீதம் வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 33 சிறப்பு பள்ளிகள், 5 மனநல பாதிக்கப்பட்டோருக்கான மனநல காப்பகங்கள், 6 ஆரம்ப கால பயிற்சி மையங்கள் மற்றும் 14 வயதிற்கு மேற்பட்ட அறிவுசார் குறைபாடுடையோருக்கான 6 தங்கும் விடுதி வசதிகளுடன் கூடிய தொழிற் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது.

குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்க ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக தனியாக வருகிறது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வேண்டி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக மருத்துவரைக்கொண்டு பரிசோதனை செய்து அடையாள அட்டை அன்றே வழங்கப்படுகிறது. மேலும் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு மற்றும் திருவெறும்பூர் பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருச்சிராப்பள்ளி கோட்டாட்சியர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் கலந்துக்கொள்ளும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தகவல் பரிமாற்றம் செய்ய சைகை மொழிபெயர்ப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. முகாமில் தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கப்பட்டது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தனது கட்டுப்பட்டின் கீழ் கொண்டு வந்து, பல்வேறு புதிய நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

தமிழக அரசின் உரிமைகள் திட்டம் (RIGHTS PROJECT) உலக வங்கி நிதியுதவியுடன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக 2022 ஏப்ரல் மாதம் துவங்கப்பட்டு திட்ட செயல்பாடுகள் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் மாவட்ட அளவிலான திட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு திட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில் “One Stop Centre” என்ற திட்டம் முசிறி மற்றும் இலால்குடி பகுதியில் ஆரம்பிக்கப்பட உள்ளது. 19 மாற்றுத்திறனாளிகளின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே கிடைக்க செய்வது இம்மையத்தின் நோக்கமாகும். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கிடைக்கபெறும் திட்டங்கள் அனைத்தும் இவ்வகை மையங்களிலும் கிடைக்க பெறும். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் 65 சிறப்பாசிரியர்கள் மற்றும் 25 தசைப்பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம்: ரூ.14,000/- லிருந்து ரூ.18,000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் அரசு நகரப் பேருந்துகளில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை காண்பித்து கட்டணமில்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான நான்கு வகை திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளியை திருமணம் புரியும் சாதாரண நபருக்கு ரூ.25,000/- மற்றும் படித்த பட்டதாரி மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50,000/- தேசிய சேமிப்பு பத்திரம் (NSC) வழங்கப்பட்டு வந்த நிதியுதவி தொகை தற்போது முழுவதும் ரொக்கமாக வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர்/திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நல நிதியிலிருந்து ரூ.5,00,000/- பெறப்பட்டு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு

உதவிஉபகரணங்கள்

அதேபோல் மாண்புமிகு துறையூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க ரூ.10,00,000/- நிதிஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி பள்ளி மற்றும் கலுலூரி மாணவ மாணவியர்கள் பயனடையும் வண்ணம் கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை வருடாந்தோரும் வழங்கப்பட்டு வருகிறது.

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மற்றும் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் அங்கீகாரம் மற்றும் நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வரும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில், பயிற்சி பெறும் குழந்தைகள் மற்றும் பாதுகாவலருடன் மாவட்ட தலைநகரத்தில் இருந்து 100கி.மீ.க்கு மிகாமல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி ஒரு நாள் சுற்றுலா செல்லப்பட்டது.

தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும்

மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்

வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் கலை நிகழ்வுகள்

மற்றும் தெரு முனை நாடக நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

அறிவுசார் குறைபாடுடையோர், கடுமையாக பாதிக்கப்பட்டோர், தொழு நோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் ரூ.1500/- லிருந்து ரூ.2000/- உயர்த்தப்பட்டு 10929 பயனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக்கொள்ள கூடுதலாக மாதம் ரூ.1000/- வழங்கும் திட்டத்தில் 112 பயனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

இன்று 15 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,06,000/- மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளும், 65 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.83,500/- மதிப்பீட்டில் விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும் மற்றும் 250 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13,549/- மதிப்பீட்டில் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட

 திறன்பேசிகளும் (Smart Phones) ஆக மொத்தம் 330 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,04,04,750/- மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பல்வேறு நல சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பேட்டரியால் இயங்கும் (E-CAR) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் பேருந்து நிலையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வந்து செல்ல தடைகளற்ற சூழலுடன் வந்து செல்ல (E-CAR) வசதி மாவட்ட ஆட்சியரால் 8 சீட்டுடன் அமர்ந்து செல்ல கூடிய வசதியுடன் ரு 4,79.000.00 மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பல்வேறு நல சங்கங்களின் கோரிக்கையை ஏற்று மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 50 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி (CSR) மூலமாக ரூ 50,000.00 மதிப்பிலான இயந்திரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பல்வேறு நல சங்கங்களின் கோரிக்கையை ஏற்று மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில்  200 பயனாளிகள் அமரும் வகையில் மேற்கூரை வசதி (CSR) மூலமாக ரூ3,50.000.00 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *