Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

ஊடகத்தில் சிறந்த தலைமையாக விரும்பும் மாணவர்களுக்கு திருச்சி கொங்கு நாடு கல்லூரி அரிய வாய்ப்பு

திருச்சி கொங்குநாடு கல்லூரி மற்றும் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் இணைந்து நடத்தும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான இலவச ஊடக பயிற்சி முகாம் வருகின்ற புதன்கிழமை (23.08.2023)ஆம் தேதி நடைபெற உள்ளது.

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான இலவச ஊடக பயிற்சி நிகழ்வில் தலைமை விருந்தினர்களாக முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், கொங்குநாடு கல்வி நிறுவனங்கள் தலைவர் முனைவர் பெரியசாமி கலந்து கொள்கின்றனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி ஹலோ எப்எம் நிலையை தலைவர் டைரி சகா, விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆண்ட்ரூஸ், சன் டிவி செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு, விஜய் டிவி சின்னத்திரை நடிகை பவித்ரா, நிகழ்ச்சி தொகுப்பாளர் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு கொங்குநாடு பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் செய்துள்ளனர். வருகின்ற ஆகஸ்ட் (23.08.2023)ஆம் தேதி புதன்கிழமை காலை 9:00 மணிக்கு இந்த கல்லூரி மாணவர்களுக்கான இலவச ஊடகப் பயிற்சி நடைபெற உள்ளது.

இதில் மாணவர்கள் தங்களை ஊடகத்தில் எப்படி, எந்த விதமாக ஈடுபடுத்திக் கொள்ளலாம், ஊடகத்தில் உள்ள பல்வேறு விதமான சிறப்பு அம்சங்கள் குறித்து இந்நிகழ்ச்சியில் அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். இலவச ஊடக பயிற்சிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் கீழே குறிப்பிட்டுள்ள லிங்கை கிளிக் செய்து https://forms.gle/X9H8a9b2fCau3MB88 இந்த கூகுள் விண்ணப்பத்தை நிரப்பி கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *