திருச்சி மாவட்டம் மணப்பாறை வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் தலைவர் மோசன் தாஸ், செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மணப்பாறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்றமும், இரண்டு உரிமையியல் நீதிமன்றங்களும், ஒரு குற்றவியல் நடுவர் நீதிமன்றமும் மொத்தம் 4 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தொடர்ந்து வழக்கறிஞர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும், மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நடுவர் கருப்பசாமியையும், கிளார்க் குமரேசனையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும், என்பதை வலியுறுத்தி இன்று (22.08.2023)ம் தேதி முதல் மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் பணிகளில் இருந்து காலவரையறையின்றி விலகியிருப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேவை ஏற்பட்டால் உண்ணாவிரதம் இருப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments