திருச்சி மாவட்டம் கல்லக்குடி பேரூராட்சியில் உள்ள ஒரு சில வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி தொடர்ந்து மனு கொடுத்து வந்தார் அப்பகுதி இளைஞர் அன்டோ ரிச்சர்ட்சன். இவர் செல்போனை உடைத்தும் போனில் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கல்லக்குடி பேரூராட்சி தலைவர் துரை மீது கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இளைஞரின் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

எனினும் உரிய ஆதாரத்துடன் கல்லக்குடி காவல்நிலையத்தில் கடந்த ஜூலை 31- ம் தேதி புகார் அளித்ததின் பேரில் ஆகஸ்ட் 2 -ம்தேதி மனு ஏற்பு ரசீது வழங்கி 25 நாட்கள் கடந்தும் போலீஸார் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர் குற்றம்சாட்டியுள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn



            
            
            
            
            
            
            
            
            
            


Comments