காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும், காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.54, கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.8100, வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 32 வது நாளான இன்று எலும்பு துண்டுகளை உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த அமைச்சர் உதயநிதி காரை மறித்தனர். பின்னர் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் உதயநிதியிடம் எடுத்துரைத்து மனு அளித்தனர். இதனையடுத்து உங்களின் முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments