செப்டம்பர் மாதம் இந்தியா முழுவதும் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் ஒருபகுதியாக திருச்சி ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியில் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
இந்தக் கல்லூரியில் 15 இருக்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள் உள்ளன. பச்சை நிறத்தில் மரகத அழகி, கிரே பேன்சி, பிளைன் டைகர் உள்ளிட்ட பலவகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. இவைகளுக்கு தேவையான தேன் எடுப்பதற்கு இங்கு ஏற்ற சூழ்நிலை உள்ளது.
ஒவ்வொரு இன வண்ணத்துப்பூச்சிகள் முட்டையிடுவதற்கு தேன் எடுப்பதற்கும், ஒவ்வொரு மரங்களை தேர்வு செய்கின்றன. திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியில் நடத்தப்பட்டுள்ளது.
மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆராய்ச்சி பேராசிரியர் ராஜேஷ் வண்ணத்துபூச்சிகளின் வகைகள் குறித்தும், அவற்றை எவ்வாறு கண்டறிவது குறித்து எடுத்துரைத்தார். வண்ணத்துப்பூச்சிகள் அதிகம் உள்ள இடங்களுக்கு சென்று நேரடியாக சென்று அவற்றின் இனப்பெருக்கம் வகைகள் குறித்து தெளிவாக விளக்கமளித்தார்.
இது மாணவிகளுக்கு புதுவித அனுபவமும், பயனுள்ளதாகவும் இருந்துள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn






Comments