திருச்சி திருவரம்பூர் நியூ டவுன் எஸ் ஏ எஸ் நகரில் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் கம்பிகளால் கட்டப்பட்டு இருந்த அபாயகரமான ஒரு மின் கம்பம் இருந்தது. மேலும் அந்த மின் கம்பத்திலிருந்து அங்குள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த மின்கம்பத்தின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் படி இருந்து வந்தது. இதற்கிடையில் திருச்சி மாநகரில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் அந்த மின்கம்பம் கீழே விழும் நிலையில் இருந்தது. அந்த வழியாக செல்லும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து வந்தனர். இதுகுறித்து திருச்சி விஷன் செய்தி வெளிப்பட்டது.
இதனை தொடர்ந்து மின் வாரிய ஊழியர்கள் அதனை மாற்றியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் திருச்சி விஷன் செய்தி எதிரொலியாக அபாயகரமான மின்கம்பத்தை மாற்றிய மின்சார வாரியத்திற்கு திருச்சி விஷன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments