Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் நாளை (23.09.2023) இளைஞர் திறன் திருவிழா மற்றும் வேலை வாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த 18 வயது பூர்த்தியடைந்த, குறைந்த பட்சம் 8th, 10th, ஐடிஐ, டிப்ளமோ, 12th, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பெற்ற இளைஞர்களுக்கு (ஆண் / பெண் இருபாலரும்) அவரவர்களின் தகுதிக்கேற்ப,

தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளித்திட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து வருகின்ற (23.09.2023) அன்று தந்தை பெரியார் அரசு கலை & அறிவியல் கல்லூரி, அண்ணா விளையாட்டு மைதானம் அருகில், நடைபெறவுள்ளது. 

இம்முகாமில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதால், திருச்சிராப்பள்ளி மாவட்டம் மற்றும் இதரப் பகுதிகளைச் சார்ந்த இளைஞர்கள் மேற்படி வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெற தன்விபரம் (Bio-Data), கல்வித்தகுதி, இருப்பிடச்சான்று, புகைப்படம் மற்றும் இதர சான்றிதழ்களின் நகலுடன் நேரில் வருகை தர வேண்டும்.

மேலும் இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியரகம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0431-2412726 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு மேற்படி வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவல்களைப் பெறலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAx

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *