Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் ரவுடிகளுக்கு நாட்டு வெடிகுண்டு விற்பனை செய்த 2 பேர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய சரகம் அகிலாண்டபுரத்தில், கடந்த சிலமாதங்களுக்கு முன்பு குறிப்பிட்ட சமூகத்தின் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இருதரப்பிலும், வழக்கு மற்றும் எதிர் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்படி வழக்கில் பயன்படுத்தப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் தொடர்பாக தீவிர புலணாய்வு மேற்கொண்டதில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வீ.வருண் குமார், தொலைபேசி 9487464651 எண்ணிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பெட்டவாய்த்தலையில் தீனா (எ) தீனதயாளன், த.பெ. ராஜகோபால், காந்திநகர்காந்திநகர், பெருகமணி, ஸ்ரீரங்கம் என்பவரையும், ஜீயபுரம் காவல் நிலையத்தில் (1) மணிகண்டன் (33), த.பெ. வேலன், பெரியார் நகர், அனலை, திருப்பராய்துறை (2) சிவசண்முகம் (25), த.பெ. அன்பழகன், (3) சூர்யா (21) த.பெ. ராஜா, ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேற்படி வழக்கில் உபயோகப்படுத்தப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள், வாத்தலை காவல் சரகம் சித்தாம்பூர் கிராமம் மற்றும் காணக்கிளியநல்லூர் காவல் சரகம் குமுளூர் கிராமம் வெடி கடைகளிலிருந்து பெறப்பட்டது தெரியவரவே, மேற்படி இருவெடிகடைகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டும், அவர்களின் பட்டாசு உரிமத்தினை இரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்படி சம்பவத்தின் தொடர்ச்சியாக, மேற்கண்ட காவல் கண்காணிப்பாளரின் எண்ணிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சோமரசம்பேட்டை தாயனூர் பகுதியில் தென் மாநில ரவுடிகளை தங்க வைத்து புகலிடம் கொடுத்தது, அவர்களுக்கு நாட்டு வெடிகுண்டு பயிற்சி பெற்றது நாட்டு வெடிகுண்டு தயாரிக்க கற்றுக் கொண்டது. மாவட்டத்தின் பிற ரவுடிகளுக்கு நாட்டு வெடிகுண்டு விற்பனை செய்ய தயாரானது, போன்ற சட்டவிரோத செயல்களை செய்து வந்த தாயனூர் பகுதியை சேர்ந்த (1) சிவசக்தி (21), த/பெ சுப்ரமணியன், கீழபுறம், கல்லுக்காடு, தாயனூர், ஸ்ரீரங்கம் தாலுக்கா, திருச்சி மாவட்டம் மற்றும் (2) கர்ணன் (23) த/பெ சௌந்தரராஜன், 4/8 வடக்கு தெரு, தாயனூர், ஸ்ரீரங்கம் தாலுக்கா திருச்சி மாவட்டம் ஆகிய இருவரையும் சோமரசம்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட இருவரிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள், கத்தி அருவாள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளுக்கு, இவர்கள் துணைபோயிருப்பது தெரிய வருகிறது. மேலும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ. வருண் குமார், திருச்சி மாவட்டம் முழுவதும் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பவர்கள், பயன்படுத்துபவர்கள் ஆகியோரைக் கண்டறிந்து, மிகக்கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்தும், மேலும் அவர்களுக்கு வெடிமருந்து சப்ளை செய்யும் நபர்களின் பட்டாசு / வெடி உரிமம் இரத்து செய்யப்பட்டு அவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பதை தெரிவித்து கொள்ளப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *