தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (டேன் ஜெட்கோ) லஞ்ச ஒழிப்பு டிஜிபியாக பணிபுரிந்து வந்த பி.கே. ரவி, நேற்று முன்தினம் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர், 1989ம் ஆண்டு தொகுப்பு ஐபிஎஸ் அதிகாரியாக தமிழகத்தில் பணியாற்றி வந்தார் சமீபத்தில் தமிழக காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்ட சங்கர் ஜூவாலுடன் போட்டியில் இவர் இருந்தார் இந்நிலையில் திடீரென விருப்ப ஓய்வை அளித்திருக்கிறார்.
ஊர்க்காவல் படை டிஜிபியாக இருந்த ரவி, ஆகஸ்டு 3ல் மின்வாரிய லஞ்ச ஒழிப்பு டிஜிபியாக மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், அரசியலில் குதிக்கப்போவதா கவும், காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இவரது தந்தை ராம், பீகாரில் எம்எல்ஏவாகவும், 3 முறை லோக்சபா எம்பியுமாக இருந்தவர் ஆவார்.
அதனால் இவரும் அரசியல் ஆழத்தை பார்த்து விடுவோம் என களமிறங்கிவிட்டார் போல !. மீசையை பார்த்தால் ஆசை வெளிப்படுகிறது ஆனா ஷாக் அடிக்காம இருக்கணும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision




Comments