திருச்சி விமான நிலையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஆறுமுகம். இவர் சோதனை சாவடியில் பணி முடித்து விட்டு தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது ஏர்போர்ட் எல்லைக்கு உட்பட்ட கருப்பு கோயில் அருகில் மாடு குறுக்கே வந்ததின் காரணமாக கீழே விழுந்து தலையில் அடிபட்டு தற்பொழுது கே.எம்.சி, (மத்திய பேருந்து நிலையம் அருகில்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments