திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கொக்கரசன்பேட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதை மாதிரி வைத்து விற்பனை செய்து வருவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் அதிரடியாக சோதனையிட்டபோது காட்டூர் அண்ணா நகர் கொடிமர தெருவை சேர்ந்த ஜாபரலி மகன் ஆசிக் ( 24 ). இவர் டிப்ளமோ படித்துள்ளார். காட்டூர் போஸ் தெருவை சேர்ந்த முகமது ரபிக் மகன் முகமது ஹர்ஷத் (23). இவர் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி ஆவார். இருவரும் போதை மாதிரி வைத்திருந்தது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் அவர்கள் இருவரையும் திருச்சி எஸ் பி தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போதை மாத்திரை பத்து அட்டைகள் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           9
9                           
 
 
 
 
 
 
 
 

 15 October, 2023
 15 October, 2023





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments