திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் குழு மற்றும் புகார் அளிப்பது தொடர்பாக (PoSh) கமிட்டி அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும்

குழு உறுப்பினர்களுக்கு பாலியல் துன்புறுத்துதல் தடுப்பு சட்டம் 2013 குறித்த விழிப்புணர்வு பயிற்சி மற்றும் பணியாளர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகையை மேயர் மு. அன்பழகன், திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஜி.திவ்யா, பாலியல் நிபுணர் முனைவர் விஜயலட்சுமி, லூர்துராஜ், நகர்நல அலுவலர் மரு.மணிவண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்துகொண்டார்கள்.

முன்னதாக உறுதிமொழி எடுத்து விழிப்புணர்வினை பணியாளர்களுக்கு மத்தியில் உருவாக்க வழிவகை செய்தார்கள் இதன் மூலம் பணியிடத்தில் பாலியல் தொடர்பான வன்முறைகள் நீங்கி அனைவரும் நட்புறவோடு செயல்படவும் அதற்கான புகாரை அளிப்பதற்கும் அனைவருக்கும் ஏதுவாக அமையும் என மேயர் அன்பழகன் கூறினார்கள்.

தொடர்ந்து தொடர்ந்து பாலியல் துன்புறுத்துதல் தடுப்பு சட்டம் 2013 குறித்து பயிற்சி தமிழ்நாடு நகர்ப்புற முதன்மை முதலீட்டு திட்டத்தை செயல்படுத்தி வரும் ஆளுமை மேம்படு மற்றும் விழிப்புணர்வு ஆலோசகர் குழுவில் உள்ள முனைவர் விஜயலட்சுமி, லூர்துராஜ் பயிற்சி வகுப்பினை நடத்தினார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments