திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதி 3 சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (68). இவர் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் டைப்பிங் இன்ஸ்டியூட் வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அந்த டைப் ரைட்டிங் இன்ஸ்டியூட் வரும் சிறுமிகள், பள்ளி மாணவிகள், திருமணம் ஆனவர்கள் என பலரிடம் டைப்ரைட்டிங் சொல்லிக் கொடுப்பது போல் சத்தியமூர்த்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு அவர்களின் அங்கங்களை தெரியாமல் புகைப்படம் எடுத்து வைத்து ரசித்து வந்ததாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு புகார் வந்தது.

அதனை தொடர்ந்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி இச்சம்பவம் குறித்து சத்தியமூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments