திருச்சி மாநகராட்சியில் வார்டு 33,(துணை மேயர் திவ்யா தனக்கொடி வார்டு செக்கடித் தெரு) இந்த வார்டில் தண்ணீர் குழாய் பதிக்கும் பணி முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. தெருவில் தோண்டிய பள்ளங்கள் சரியாக மூடாமல் இருக்கிறது.
இரு சக்கர வாகனங்கள் கூட உள்ளே செல்ல முடியவில்லை. முதியவர்களும், குழந்தைகளும் அதிகம் வசிக்கும் பகுதியில் நடந்து செல்லும் போது பெரும் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். முதியவர்கள் மருத்துவமனை செல்ல ஒரு ஆட்டோ கூட உள்ளே வர முடியவில்லை.
மாநகராட்சி மக்களின் குறைகளை தீர்க்க முயலும் துணை மேயர் தனது சொந்த வார்டு மக்களின் குறைகளை உடனே தீர்க்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணமாக உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments