திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து அரியமங்கலம் நோக்கி செல்லக்கூடிய தஞ்சை ரோடு பள்ளிவாசல் எதிராக ஐயங்கார் பேக்கரி அருகில் தனியார் KBS பேருந்து அதிவேகமாக வந்தால் இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி இருவர் மீது விபத்துக்குள்ளானது. இதில் கணவன்- மனைவி இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடினர். உடனே அவரச ஊர்தி மூலம் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது போன்று திருச்சி மாநகரில் அடிக்கடி தனியார் பேருந்துகள் வேகமாகவும், போட்டி போட்டு கொண்டு செல்வதால் வாகன ஓட்டிகளுக்கு, பாதசாரிகளும் விபத்துக்குள்ளாகி உயிரிழக்க கூடிய நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தகுதியான ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்குகிறார்களா? இதை தடுக்க காவல் துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறார்களா? என்று குறித்து சமூக ஆர்வலர் கேள்வி எழுப்புகின்றனர்.

திருச்சி மாநகரில் தொடர்ந்து தனியார் பேருந்துகளால் ஏற்படும் விபத்தை தடுக்கும் பொருட்டு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டுமென வாகன ஓட்டிகளும், சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு வேகமாக செல்வதாலும் விபத்துக்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments