Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சீருடைப் பணிக்கான உடல் தகுதித் தேர்வு தொடக்கம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 750 பணியிடங்களுக்கான சார்பு உதவி ஆய்வாளர் (ஆண்/பெண்) பதவிக்கான எழுத்துதேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள் (பெண்கள் மட்டும்) திருச்சி மாநகரம் கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் இன்றும், நாளையும் (07.11.23 & 08.11.23) நடைபெறுகிறது.

திருச்சி மாநகரில் பொது போட்டியாளர்கள் 300 நபர்கள், காவல்துறை ஒதுக்கீட்டில் 71 நபர்கள் என மொத்தம் 371 நபர்கள் கலந்து கொள்ள அழைப்பு கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் பொது போட்டியாளர்கள் 240 நபர்களும், காவல்துறை ஒதுக்கீட்டில் 67 நபர்கள் என மொத்தம் 307 நபர்கள் கலந்து கொண்டார்கள். உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டவர்களிடம் இன்று 07.11.2023-ந் தேதி சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உயரம் சரிபார்த்தல், பின்னர் 400 மீட்டர் ஓட்டம் என மொத்தம் 3 நிகழ்வுகள் நடத்தப்பட்டது. நாளை 08.11.2023-ந்தேதி நீளம் தாண்டுதல், பந்து எரிதல், 100மீட்டர் / 200மீட்டர் ஓட்டம் என 3 நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளது.

மேற்கண்ட உடற்தகுதி தேர்வில் போட்டியாளர்களின் உயரத்தை சரிபார்தல் நிகழ்வினை திருச்சிமாநகர காவல் ஆணையர் அவர்கள் நேரில் மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தும்,

பணியில் இருந்த காவல் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.

மேற்கண்ட நிகழ்வின்போது திருச்சி சரக காவல்துறை துணை தலைவர்P.பகலவன், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்(தெற்கு)S.செல்வகுமார் அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உட னிருந்தார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *