திருச்சி விமான நிலையத்திலிருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து இன்று காலை 8:05மணிக்கு, 160 பயணிகளுடன் பெங்களூர் வழியாக மும்பை செல்லவேண்டிய தனியார் (இன்டிகோ) விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக புறப்படவில்லை.

இதனால் அந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகள் 160 பேர் தற்பொழுது கவலையடைந்து விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பயணிகளை சிறுசிறு குழுக்களாக பிரித்து மாற்று விமானங்களில் சென்னை வழியாக பெங்களூர் மற்றும் மும்பைக்கு அனுப்பி வைக்கும் பணியில் விமான நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments