தமிழக அரசின் புதிய உள்ளாட்சிகள் அமைப்பு சட்டத்தின்படி அனைத்து நிறுவனங்களும் வணிக உரிமம் எடுத்த பிறகே வணிகம் நடத்தப்படவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31ம் தேதிக்குள் வணிக நிறுவனங்கள் ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு வணிக உரிம கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் இனிவரும் காலங்களில் மாநகராட்சியின் வணிக உரிமம் அனைத்து விதமான பணிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே காலதாமதக் கட்டணம் இன்றி வணிக உரிமம் பெற வணிக பெருமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments