மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் பில்லுப்பட்டியை சேர்ந்தவர்முத்து இவருடைய வளர்ப்பு நாய் அவரது தோட்டத்தில் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள தண்ணீர் வற்றிய கிணற்றில் தவறி விழுந்தது.

இதனை அடுத்து முத்து உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் சிறப்பு நிலை அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி கயிற்றின் உதவியுடன் நாயை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments