திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த அதிகாரம் பகுதியில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மின்கம்பிகள் செல்கின்றன. இந்த நிலையில் இன்று காலை அதிக பாரம் ஏற்றி கொண்டு வந்த லாரி ஒன்று மின் கம்பிகள் மீது மோதி மின்கம்பம் சாய்ந்ததாக கூறப்படுகிறது.
இதனால் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை.
இதுப்பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மின்சார வாரிய ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மின்சாரத்தை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் துவங்குறிச்சி போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments